ரிலீஸ் தேதியை மாற்றிய லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம்! எப்போ தெரியுமா?

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பாவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ரன் படத்தினை இயக்கியுள்ளது.

ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்க, இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாசர், ஆர்யா, சசிகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்

raghava lawrence in rudhran movie release date changed 1664211378

வெற்றிமாறன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.இந்நிலையில் சில மாதம் முன் ருத்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல .வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பொங்கல் ரிலீசுக்கு வாரிசுடன் மோத உள்ள அஜித்தின் துணிவு.. உதயநிதி எடுக்கும் அதிரடி முடிவு!

முன்னதாக படத்தை கிருஸ்துமஸ் பண்டிமையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அதுவும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஎஃப்எக்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதால் படம் தள்ளிப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் 14.04.2023 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment