News
ஆன்லைன் வாயிலாக சட்டப் படிப்பு தேர்வுகள் நடைபெறும்!!!
தற்போது நம் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கல்லூரிகளில் தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுகின்றன. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் சில வருடங்களாகவே பள்ளிகள் திறக்கப் படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. காரணம் என்னவெனில் சில மாதங்கள் முன்பு வரை தொடங்கு அமல்படுத்தப்பட்டது மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசானது முழு ஊரடங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தியது.
இதன் விளைவாக தொழில் முழக்கங்கள் மட்டுமின்றி மாணவர்களின் பள்ளிப் படிப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பலருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் பலரும் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நம் தமிழகத்தில் சட்டப்படிப்புக்கான தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இவை இணைய வாயிலாக தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வசதியாக மாதிரித் தேர்வு நடத்தப்படும் என்றும் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்/ மேலும் அவற்றை இணையதளத்தில் 15ஆம் தேதி விவரங்களை அறியலாம் என்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
