ஆளுநர் சொன்ன ‘அந்த’ வார்த்தை; செம்ம கொண்டாட்டத்தில் திமுக!

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள ஏழு அடி உயரமுள்ள திருவள்ளுவரின் திருஉருவ வெங்கல சிலைக்கு திருவள்ளுவர் பேரவை, கம்பன் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு திருவள்ளுவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இதில் கம்பன் கழக தலைவர், ராமச்சந்திரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேசுகையில்: ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்தார்.

செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருவன் அடித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் முறையாக விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என உறுதியளித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை சுபஸ்ரீ மரண வழக்கை என்னிடம் அளித்தால் குற்றவாளிகளை ஏழே நாளில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியும் கர்நாடகாவில் போய் கண்டுபிடிக்க சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.