சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான்…ஆனால் திமுகவில்..?- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்!!

அதிமுக-வில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என அறிவித்திருந்தார்.

இத்தகைய உத்தரவானது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தமிழக காவல்துறையினர் அனுமதியுடன் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதற்கிடையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் கிடையாது என்றும் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் அனுமதிக்க கூடாது என்று டிஜிபி இடம் இபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் ஒன்று கொடுத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூறையாடியது குறித்து, திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.. ஆனால் ஆளும் கட்சிக்கு இல்லை என்று நிரூபித்து விட்டது என கூறினார்.

இதனிடையே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். அதே போல் அதிமுகவின் தலைமை செயலகத்தை பாதுகாக்க வேண்டும் என புகார் மனு கொடுத்திருப்பதாக கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment