Connect with us

இதுவரை 13 பேர் உயிரிழப்பு! மெரினாவில் கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடக்கம்!!

chennai beach

News

இதுவரை 13 பேர் உயிரிழப்பு! மெரினாவில் கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடக்கம்!!

இதுவரை 13 பேர் உயிரிழப்பு! மெரினாவில் கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடக்கம்!!

உலகிலேயே இரண்டாம் நீண்ட கடற்கரை என்ற பெயரை பெற்றுள்ளது நம் மெரினா கடற்கரை. மேலும் இவை சிங்கார சென்னையின் மிகப்பெரிய சுற்றுலா தளமாக காணப்படுகிறது.மெரினா

மேலும் அவற்றின் நீளம் சுமார் 12 கிலோமீட்டர் ஆகும். இந்த நிலையில் சில நாட்களாகவே இந்த மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி மெரினா கடற்கரையில் மக்கள் கூட தமிழக அரசு அனுமதித்துள்ளது.மெரினா

இதனால் தற்போது மெரினாவில் கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சென்னை மெரினாவில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடலில் மூழ்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சைலேந்திரபாபுஇதனால் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா கடலில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில் உயிர்காப்பு பிரிவு தொடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த உயிர் காப்பு பிரிவில் ஒருங்கிணைப்பாளராக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் கடற்கரையில் செல்ல அனுமதி அளிக்கப்படாலும் அங்கு மிகவும் பாதுகாப்பான நிலையில் மக்கள் கண்காணிக்கப்படுவது இந்த உயிர்காப்பு பிரிவு தொடக்கத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top