வேளாண்மைத்துறை திட்டங்கள் தொடக்கம்! கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் பொறுப்பேற்றவுடன் அடுத்தடுத்து புதுப்புது திட்டங்கள் தமிழகத்தில் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் வேளாண் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அண்மை தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வேளாண்மை துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சர்க்கரை ஆலைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை அரவை பருவத்திற்கான ஊக்கத்தொகை வினியோகம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் ரூபாய் 97.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூபாய் 11 கோடியில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 150.89 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 16 லட்சம் ஏக்கரில் நெல் தரிசு நிலத்தில் உளுந்து, பச்சைப்பயிறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இ-வாடகை செயலி மற்றும் வேளாண் இயந்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment