9 புதிய மருத்துவ கல்லூரிகள் துவக்கம்! ஏழைகளுக்கு மருத்துவ வசதி செய்வதே எங்கள் நோக்கம்!

தற்போது இந்தியாவில் பல அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ளன. அவை கிராமங்களிலும் கூட அதிகமாக அரசு மருத்துவமனைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இதனால் சாதாரண மக்கள் கூட இந்த அரசு மருத்துவமனையினால் மிகவும் பயன் அடைகின்றனர்.மோடி

அரசு மருத்துவமனைகள் தற்போது தனியார் மருத்துவமனைகளை விஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் நன்றாக காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி மேலும் 9 புதிய மருத்துவ கல்லூரிகளை துவக்கி வைத்துள்ளார்.

அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்டது காணப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

காசிப்பூர், மிர்சாபூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் போராட்டங்கள் வந்தாலும் கூட தற்போது அந்த மாநிலத்தில் 9 புதிய கல்லூரிகளை தொடக்கிவைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment