’விஷால் 32’ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்!

நடிகர் விஷால் நடித்து வரும் 32வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் வினோத்குமார் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

விஷாலின் 32வது படத்திற்கு ’லத்திசார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டில் டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் ஜோடியாக இந்த படத்தில் நடிகை சுனைனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment