இந்தாண்டு மிகவும் தாமதமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!ஆனா மழைப்பொழிவு அதிகம்!!!

நம் தமிழகத்திற்கு மழைப்பொழிவை கொடுக்கும் காலநிலை என்றால் அதனை வடகிழக்கு பருவமழை காலம் என்று சொல்லலாம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் தேதி வெளியாகி உள்ளது.

northeast 1அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதியில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் வட கிழக்கு பருவ காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தென்னிந்திய பகுதியில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26 ஆம் தேதியில் தொடங்க சாதகமான சூழல் தற்போது நிலவுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1 முதல் பத்தொன்பதாம் தேதி வரை 149 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 52 சதவீதம் அதிகமாகும். எப்போதும் வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மிகத் தாமதமாக அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.

ஆயினும் தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருந்து குடிநீர் பற்றாக்குறையை தவிர்த்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment