திருமண ஊர்வலம் நடந்த பின்னர் திடீர் டுவிஸ்ட்.. மணமகளின் தங்கையை மணந்த மாப்பிள்ளை..!

பீகார் மாநிலத்தில் மாப்பிள்ளையின் திருமண ஊர்வலம் முடிந்த பிறகு திடீரென மணமகள் மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ராஜேஷ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரிங்கு குமாரி என்பவருக்கும் திருமணம் நடத்த இரு தரப்பு பெற்றோர்கள் பேசி முடிவு செய்தனர். இதனை அடுத்து திருமண தினத்தின் முந்தைய நாள் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிலையில் திடீரென நள்ளிரவு 11 மணியளவில் மணப்பெண்ணின் சகோதரி புகுல் குமாரி என்பவர் மாப்பிள்ளை ராஜேஷின் அறைக்குச் சென்று நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார். இதனை அடுத்து மணமகன் ராஜேஷ் அவசர அவசரமாக தனது குடும்பத்தினருடன் பேசி ஏற்கனவே புகுல் குமாரியை  தான் காதலித்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவர் தற்கொலை செய்து கொள்கிறார் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

marriage2இதனை அடுத்து பெண் வீட்டாரிடம் இது குறித்து மாப்பிள்ளை வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரு வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் தெரிவித்து தெரிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் ராஜேஷ் மற்றும் மணமகள் ரிங்கு குமாரி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரிங்கு குமாரின் சகோதரி புகுல் குமாரி ஏற்கனவே ராஜேஷுடன் கல்லூரியில் படிக்கும் போது பழகி உள்ளார் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து ரிங்கு குமாரி தனது தங்கைக்காக ராஜேஷை விட்டுக் கொடுக்க முன்வந்ததை அடுத்து ராஜேஷ் மற்றும் புகுல் குமாரி திருமணம் இனிதே ஆக நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews