Connect with us

கேப்டன் கோலிக்கு இன்றே கடைசி ஆட்டம்! கனவாக மாறிய கப்! சோகத்தில் ரசிகர்கள்!!

விராட் கோலி

விளையாட்டு

கேப்டன் கோலிக்கு இன்றே கடைசி ஆட்டம்! கனவாக மாறிய கப்! சோகத்தில் ரசிகர்கள்!!

பேட்டிங் ஃபீல்டிங் என அனைத்திலும் நம்பர்-ஒன் பேட்ஸ்மேனாக இருந்து வந்தவர் விராட் கோலி. இந்தநிலையில் சில நாட்களாக அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ஆயினும் சோர்வடையாமல் போட்டியில் ஒவ்வொரு கணமும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்.

விராட் கோலி

இவர் தற்போது இந்தியாவின் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக பொறுப்பேற்று வருகிறார். ஆனால் ஐசிசியின் எந்த ஒரு கோப்பையும் கேப்டன் விராட்கோலிக்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

அதோடு மட்டுமில்லாமல் ipl கோப்பை என்பதும் விராட் கோலி  கனவாகவே காணப்படுகிறது. தற்போது t20 வேர்ல்டு கப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முடிவில் விராட் கோலி தனது t20 கேப்டன் பொறுப்பை பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த டி20 கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அரையிறுதிக்கு கூட செல்லாமல் இந்தியா வெளியேறியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததால் நேரடியாக நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனால் இந்தியாவுக்கு இருந்த ஒரு வாய்ப்பும் காணாமல் போனது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்தியா- நமீபியா அணியோடு பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இந்த போட்டியோடு இந்தியா உலக டி20 தொடரினை முடிக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டி கேப்டன் விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி போட்டி என்பதால் விராட் கோலியின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top