Connect with us

கடந்த 24 மணி நேரத்தில் பட்டையை கிளப்பிய மழை!தமிழ்நாட்டிலேயே முதலிடம் ஸ்ரீவைகுண்டம்!

கனமழை

News

கடந்த 24 மணி நேரத்தில் பட்டையை கிளப்பிய மழை!தமிழ்நாட்டிலேயே முதலிடம் ஸ்ரீவைகுண்டம்!

கடந்த 24 மணி நேரத்தில் பட்டையை கிளப்பிய மழை!தமிழ்நாட்டிலேயே முதலிடம் ஸ்ரீவைகுண்டம்!

நேற்றைய தினம் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே அதிக மழைப்பொழிவாக தமிழ்நாட்டில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தூத்துக்குடி, பரங்கிப்பேட்டையில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 14 சென்டி மீட்டர் மழையும், ஓட்டப்பிடாரம், திண்டிவனத்தில் 13 சென்டி மீட்டர்  மழையும் கொட்டியது.கனமழை

காரைக்கால் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், செஞ்சி எண்ணூரில் 10 சென்டி மீட்டர் மழையும் பெய்ததாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம், வானூர், காயல்பட்டினம், வாலி நோக்கத்தில் தலா 9 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

தாம்பரம், அம்பத்தூர், கடம்பூரில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.திருப்போரூர், வைப்பாறு, சுருளக் கோடு, செய்யாறு, மஞ்சளாறு, மரக்காணத்தில் ஏழு செண்டி மீட்டர் மழை பெய்தது.

கும்மிடிப்பூண்டி, சோழவரம், சங்கரன்கோவில், சீர்காழி, பெருஞ்சாணி அணையில் தல ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பண்ருட்டி, பெரம்பூர், நீடாமங்கலத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருவிடைமருதூர், நாகர்கோயில், வாலாஜாவில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெய்வேலி ,நாங்குநேரி, செங்கல்பட்டு சாத்தான்குளத்தில் தல 5 சென்டிமீட்டர்   மழை பதிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top