Connect with us

இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்வெட்டு..!! தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இல்லையாம்?

Tuticorin Thermal Power Station at Night 1 crop

செய்திகள்

இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்வெட்டு..!! தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இல்லையாம்?

இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்வெட்டு..!! தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இல்லையாம்?

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக திருவாரூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்னும் மூன்று நாள் மட்டுமே உபயோகத்திற்கு தேவையான நிலக்கரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரம் தயாரிக்க ஒரு அலகிற்கு நாளொன்றுக்கு 3000 முதல் 4000 டன் நிலக்கரி தேவை. ஒரு அலகில் ஒரு நாளைக்கு 4 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. ஆனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது வெறும் 80 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க அதிக அளவில் இறக்குமதி தேவை என்றும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top