Connect with us

ரயில் நிலையங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள்!! சிரமத்தில் இருந்து விடுபட அதிக வாய்ப்பு;

ரயில்வே

செய்திகள்

ரயில் நிலையங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள்!! சிரமத்தில் இருந்து விடுபட அதிக வாய்ப்பு;

ரயில் நிலையங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள்!! சிரமத்தில் இருந்து விடுபட அதிக வாய்ப்பு;

பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான போக்குவரத்து சேவை ரயில் சேவை ஆகும். இந்த ரயில் சேவை குறித்து அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வெளியிடப்படும்.

இந்நிலையில் சுமார் 2000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்க திட்டம் உள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள 2000 ரயில் நிலையங்களில் ரயில்கள் தொடர்பான விவரங்களை அறிய டிஜிட்டல் திரைகளை நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களின் நேரம், இயங்கும் நிலையை அறிய பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளை நிறுவ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. ரயில்களின் நேரம் மற்றும் அதன் இயங்கு நிலை உள்ளிட்ட விபரங்களை அறிய 65,000 டிஜிட்டல் டிஸ்ப்ளே திரைகளை அமைக்க திட்டம் உள்ளது.

ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், நடைமேடைகள் காத்திருக்கும் அறைகள் போன்றவற்றிலும் டிஜிட்டல் திரை நிறுவப்பட உள்ளன. இதனால் பயணிகள் தங்களது ரயில் நேரம் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் அவர்கள் சிரமத்தில் இருந்து சற்று விடுபடலாம் என்றும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top