கொடைக்கானல் – பழனி மலைச்சாலையில் மண்சரிவு!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் மிக கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மழை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில் ஜேசிபி போன்ற இயந்திரங்கள் முதலுதவிக்காக வைத்திருக்க வேண்டும் என அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment