மலேஷியாவில் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சுற்றுலாத்தளங்களில் மிகவும் புகழ் பெற்றது மலேசியா. இங்கு நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தின் உள்ள படாங் கலி பகுதியில் 90-க்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் விடாமல் பெய்த கனமழையில் காரணமாக இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதோடு பாறைகள் சரிந்து மரங்கள் விழுந்ததால் நிலச்சரிவில் 92 பேர் சிக்கினர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டம்! தற்கொலைகளை கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ராமதாஸ்!!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 53 க்கும் மேற்பட்டோர்களை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், 17 பேர் காணவில்லை எனவும் 16 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறுகையில் இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம்.

இன்று முதல்! ஆவின் நெய் விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

ஆனால் ஒரே இரவில் இவ்வாறான கோரவிபத்து ஏதும் நிகழவில்லை என தெரிவித்துள்ளர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.