குடும்பத்துக்கு நாம் ஆறுதல் சொல்லலாம்; எவர் சொல்வது இசைக்கு? வைரமுத்துவின் இரங்கல் ட்விட்!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர். இவர் கில்லி, திருப்பாச்சி போன்ற பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மாணிக்க விநாயகம்

இவர் பின்னணி பாடகர் மட்டுமின்றி குணசித்திர நடிகரும் ஆவார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் பண்ணி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி இசை மரபில் வந்த மாணிக்கவிநாயகம் மறைந்துவிட்டார் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விடை கொடு எங்கள் நாடே என்று பாடியவர் விடை பெற்றார் என்றும் கூறினார்.

நல்ல கலைஞன்-நல்ல மனிதன் என்று இரண்டும் கூடிய அபூர்வம் மாணிக்க விநாயகம் என்றும் கூறினார். குடும்பத்துக்கு நாம் ஆறுதல் சொல்லலாம், எவர் சொல்வது இசைக்கு? என்றும் கவிஞர் வைரமுத்து கூறினார். இதனைப் போன்று பலரும் ட்விட்டர் வாயிலாகவும், நேரிலும் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment