காமெடி நடிகருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்… நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சே!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சசிகுமாருடன் சுந்தரபாண்டியன், குட்டி புலி, கார்த்தியுடன் கொம்பன், விஷாலுடன் பண்டிய நாடு என்று ஹிட படங்களை கொடுத்தார். நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே அஜித்துக்கு தங்கையாக வேதாளம் படத்தில் நடித்தார்.

இதன்பின் மிருதன், றெக்கை என ஒருசில படங்களில் நடித்த இவர் சிலகாலம் தனது மேற்படிப்பிற்காக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பின் மீண்டும் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின்மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. அதுமட்டுமின்றி படுமோசமான விமர்சனத்தையும் பெற்றது. இப்படத்திற்காக உடல் எடையை வெகுவாகக் குறைத்திருந்தார். பிரபு தேவாவுடன் யங் மங் சங், கெளதம் கார்த்தியுடன் சிப்பாய் ஆகிய படங்கலும் பாதியில் நிற்கிறது.

லட்சுமி மேனன்

இந்நிலையில் புதுமுக இயக்குநர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். காதல் மற்றும் காமெடி கலந்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment