வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்? வெள்ளிக்கிழமை பூஜையோடு இதை செய்யுங்கள்!

பச்சை நிறம் என்றாலே பசுமையை, வளமையை தான் குறிக்கும். நாம் ஒரு ஊரின் அழகைப்பற்றி குறிப்பிடும் போது பார்க்க பச்சை பசேல் என்று இருக்கும் என்று தான் சொல்லுவோம். பச்சை பசேல் என்று இருக்கும் இடங்களை பார்க்கும் போதே நம் மனதிற்கு இதமாக இருப்பது போல இருக்கும். இதை நாம் அனைவரும் உணர்ந்து இருப்போம். அதே போல் சமையலில் கூட எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் அசைவங்கள் சுவையாக இருந்தாலும் ஆரோக்கியமான உணவு என்றால் பச்சை காய்கறிகளை தான் குறிப்பிடுவார்கள்.

இந்த நிறத்திற்கு இன்னொரு விசேஷமும் உண்டு என்னவென்றால் குபேரருக்கு உகந்த நிறமும் இந்த பச்சை நிறம் தான். இத்தனை சிறப்பம்சம் பொருந்திய இந்த பச்சை நிறத்தில் உள்ள மூன்று பொருட்களை வைத்து வெள்ளிக்கிழமைகளில் செய்யும் பூஜை குறித்து இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பச்சை நிறத்தில் உள்ள மூன்று முக்கியமான பொருட்கள் பச்சை நிறத்தில் உள்ள வஸ்திரம். அதாவது நம் உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய துண்டு அடுத்து பச்சை நிற குங்குமம். அடுத்தது பச்சை பயிறு. இந்த மூன்றும் தான் வெள்ளிக்கிழமை நாம் வைத்து வணங்க வேண்டிய மூன்று பொருட்கள். சரி இந்த பூஜை எப்படி செய்வது.

pic 10
வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்வதற்கு வியாழன் இரவே இந்த பச்சை பயிரை நன்றாக கழுவி ஒரு சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு, முதலில் இந்த பச்சை பயிரை உப்பு சேர்க்காமல் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தாளித்தம் செய்யவும் கூடாது.

அஜித்தின் துணிவு படத்தின் கதை இதுதான்! வெளியான மாஸ் அப்டேட்!

வேக வைத்த பயிறில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மண் அகல் எடுத்துக் கொள்ளுங்கள், அது புதிதாகவும் இருக்கலாம். இல்லை உபயோகப்படுத்திய பழைய அகலாகவும் இருக்கலாம். ஆனால் அதை சுத்தமாக தேய்த்து மஞ்சள் குங்குமம் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்துள்ள உள்ளங்கை அளவுள்ள துணியை இந்த அகல்மேல் போட்டு அதற்கு மேல் இந்த பச்சை நிற குங்குமத்தை வைத்து உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் இடத்திற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள். அதன் அருகில் இந்த பச்சை பயிரையும் வைத்து விடுங்கள்.

படங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து எப்போதும் வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீர்களோ அதேபோல் செய்து விடுங்கள். பின்பு பூஜை அறையில் அமர்ந்து மனதார உங்களுடைய குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த பூஜையை கட்டாயமாக பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்ய வேண்டும். நீங்கள் இந்த பூஜையை முடித்த பிறகு இந்த பச்சை நிற குங்குமத்தை தினமும் உங்கள்
நெற்றியில் இட்டு வாருங்கள். அந்த பச்சைப்பயிறு பூஜை முடிந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம், இல்லை என்றால் பசுவிற்கு தானமாக கொடுத்து விடுங்கள். இதில் முக்கியமான ஒன்று இதில் வைத்து வணங்கக்கூடிய பயிர், குங்குமம் நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். வெளியில் இருப்பவர்களுக்கு தரக்கூடாது. இது ஒரு முக்கியமான சாஸ்திரமாகும்.

இந்த பூஜையை தொடங்கிய சில நாட்களுக்குள்ளே உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி உங்கள் வாழ்க்கை நல்ல வளமாகவும் செழுமையாக்கவும் மாறுவதை நீங்களே உணர முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த பூஜை இது. நீங்களும் வழிப்பட்டு இதற்கான பலனை பெறுங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment