லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை கிடையாது! நிர்வாகத்தின் முடிவால் அதிருப்தியில் மக்கள்!!

பொதுவாக நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படும். ஆனால் லட்சத்தீவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதிலாக அங்குள்ள மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும்.

ஏனென்றால் லட்சத்தீவு பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி லட்சத்தீவில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாறாக வெள்ளிக்கிழமைகளுக்கு பதில் பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. பல ஆண்டுகாலமாக லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் மாணவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் மக்களும் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment