Connect with us

வைகையாற்றில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

chithirai thiruvizha

Tamil Nadu

வைகையாற்றில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

வைகையாற்றில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

நம் தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டதால் ஏராளமான கோவில்களில் பக்தர்கள் அதிகமாக குவிந்தனர்.

அதுவும் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திருநாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் 16-ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் காட்சியும் நடைபெற்றது.

இந்த இரண்டு நாட்களிலும் மதுரையில் வைகை ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த கூட்டத்தில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கூட்டநெரிசலில் பக்தர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு உயிரிழப்புக்கு பாதுகாப்பு துறையினர் காரணம் என்று கூறியிருந்தார். இவ்வாறு உள்ள நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வைகை ஆற்றில் சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான செல்வம் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நெரிசலில் பலியான தேனியை சேர்ந்த செல்வம் என்பவர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியை ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top