Connect with us

தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம்! படுகாயமடைந்தந்தவர்களுக்கு ஒரு லட்சம்!!-நிவாரணத்தொகை அறிவிப்பு;

mk

தமிழகம்

தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம்! படுகாயமடைந்தந்தவர்களுக்கு ஒரு லட்சம்!!-நிவாரணத்தொகை அறிவிப்பு;

தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால் இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை தருவதற்கு உத்தரவிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது போன்ற விபத்துகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விபத்து தொடர்பாக வருவாய் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மக்களுக்கு துயரம் ஏற்படாமல் தடுப்பது அரசின் நோக்கம் மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டும் என்பது அரசின் விருப்பம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்தது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது .படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top