தமிழ் சினிமாவில் நயன்தாரா 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக முன்னணியில் உள்ளார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார் நயன்தாரா.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.
நயன்தாரா,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த இருவரும் ஜூன் 9 மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி நடிக்க உள்ளார். மேலும் தன் கைவசம் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.
இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, திருமணத்திற்கு பின் நயன்தாராவின் 75-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு பெயர் அன்னபூரணி என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
MGRவுடன் போட்டி போடும் STR ! பத்து தல படத்தில் சிம்பு பெயர் தெரியுமா?
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புடைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்யும் நயன் தற்போழுது அவரது 20 வயது புகைப்படம் தற்போழுது கிடைத்துள்ளது.அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்போழுது டிரெண்ட் செய்து வருகின்றனர்.