கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்: அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது கணவரை கூலிப்படையினரை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே செந்தில்குமார் – சித்ரா தம்பதியினர் காவல் துறையில் பணிபுரிந்து வந்தனர். செந்தில்குமார் ஏட்டு பணியிலும் சித்ரா சப் இன்ஸ்பெக்டர் பணியிலும் இருந்த நிலையில் செந்தில்குமார் சில காரணங்களுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் செந்தில்குமாரின் கார் டிரைவருடன் சித்ராவுக்கு திருமணத்தை மீறி உறவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கணவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செந்தில்குமாரை கொலை செய்ய பெண் எஸ்ஐ சித்ரா கூலிப்படையை நியமனம் செய்ததாகவும் அதன் பிறகு செந்தில்குமாரை கொலை செய்த உடன் பிணத்தை ஆற்றில் தூக்கி எறிந்து விட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது சித்ரா மற்றும் டிரைவர் அமல்ராஜ் ஆகிய இருவர்தான் செந்தில்குமார் கொலைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர். டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரையே கூலிப்படையினரை வைத்து பெண் எஸ்ஐ ஒருவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.