இன்று பல மாநிலங்களில் கட்டணமில்லா மகளிர் இலவச பேருந்து பயணம்!!

பலரும் பள்ளி மற்றும் கல்லூரி பரவலாக ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடாமல் வெளியேறியதே இல்லை என்று கூறலாம். ஏனென்றால் அன்றைய தினம் பொதுவாக சக தோழிகள் உடன் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணன் தங்கை உறவு என்பது போல் கைகளில் ராக்கி கட்டி விட்டு தினத்தை கொண்டாடுவார்கள்.

இந்த ரக்ஷா பந்தன் கல்லூரிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும். இந்த  ரக்ஷா பந்தன் இன்றைய தினம் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் சில முக்கிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளன .

அந்த அறிவிப்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்தாலும் சக மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பது போல் தெரிகிறது. அதன்படி ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இன்று மட்டும் பேருந்து இலவச பயணம் செய்ய பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே நம் தமிழகத்தில் நகர்ப்புற பேருந்துகளில்  பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பயணம் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment