பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு: ஹரியானா-பஞ்சாப் ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் ஒவ்வொரு தேசிய கட்சிகளும் மும்முரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பல கட்சியினர் தற்போதைய சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்று இருந்தபோது திடீரென்று அவரது கார் சாலையில் மறிக்கப்பட்டது.

pm punjab issue

இதற்கு பலரும் வன்மையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தற்போது உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் சென்றபோது சாலைமறியல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் உரையாடல்களை பத்திரப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்த பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு என்ஐஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment