Connect with us

பால் டப்பாக்கள் பற்றாக்குறை; பால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு!! கவலையில் ஆவின்;

ஆவின்

தமிழகம்

பால் டப்பாக்கள் பற்றாக்குறை; பால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு!! கவலையில் ஆவின்;

பால் டப்பாக்கள் பற்றாக்குறை; பால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு!! கவலையில் ஆவின்;

நம் தமிழகத்திலேயே விலை குறைவாகக் காணப்படும் பால் நிறுவனம் என்றால் ஆவின்  என்று கூறலாம். அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு வந்தவுடன் முதல்முறையாக ஆவின் நிறுவனத்தில் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தார்.

தமிழகத்தில் ஏராளமான இடங்களில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த ஆவின் நிறுவனமும் புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.

இவ்வாறு இருப்பினும் ஆவின் வினியோகம் பெரும் பாதிப்பு உள்ளதாக முகவர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் காலி பால் டப்புகள் ஆவின்பால் வினியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தாமதமானதால் பால் கெட்டுப் போவதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பால் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. அம்பத்தூர் பால் பண்ணையில் பாக்கெட் பரிசோதிக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையும் உள்ளது.

ஒப்பந்த தொழிலாளர் பற்றாக்குறையால் 4000 பால் டப்பா மறுசுழற்சி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பால் முகவர் சங்கம் அறிவித்துள்ளது. 4000 பாலில் உள்ள 48 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போக வாய்ப்புள்ளது என்றும் சங்க தலைவர் பொன்னுசாமி கூறினார்.

பால் டப்பா மற்றும் தொழிலாளர் பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காண பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top