நிதி பற்றாக்குறை-சம்பளம் வழங்க முடியவில்லை!! தமிழக அரசிடம் பல்கலைக்கழகம் கோரிக்கை!!!
எங்கு பார்த்தாலும் நிதி பற்றாக்குறை என்ற பேச்சு வார்த்தை அதிக அளவு காணப்படுகிறது. அதுவும் நம் தமிழக அரசு மத்திய அரசிடம் பல்வேறு பிரிவுகளுக்கு கோரிக்கை வைக்கும். இதனால் அரசிடம் கோரிக்கைகளும் வந்த வண்ணமாக உள்ளது. அந்தப்படி தமிழக அரசிடம் பல்கலைக்கழகம் 88 கோடி ரூபாய் கோரிக்கை வைத்துள்ளது.
அதன்படி நிதி பற்றாக்குறையால் தமிழக அரசிடம் சுமார் 88 கோடி சிறப்பு நிதியை கோரியது சென்னை பல்கலைக்கழகம். ரூபாய் 100 கோடி நிதி பற்றாக்குறையால் சென்னை பல்கலைக்கழகத்தில் ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி தகவல் அளித்தார். பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தி தொலைதூரக்கல்வி மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க திட்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
