குழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்

5891ac520a8fedbe2f621029be2559e5

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அதற்கேற்றார்போல எங்கும் முருகன் ஆலயம் நீக்கமற இருக்கும். முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல் மருதமலை, வடபழனி, சென்னிமலை, குன்றக்குடி என இன்னும் பல புகழ்பெற்ற ஆலயங்கள் தமிழகத்தில் இருக்கும் அவற்றில் ஒன்றுதான் எட்டுக்குடி முருகன் கோவில். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவிலை பற்றி பல பாடல்களை இயற்றியுள்ளார்.

f4aa4fa04c0109072097fd1f59da7bbe

நாகப்பட்டினம் அருகில் பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தான். அவன் சிறந்த முருக பக்தர். எப்போதும் சரவண பவ என உச்சரித்தவாறுதான் இருப்பார். அந்த சிற்பி ஒருமுறை முருகன் சிலையை செதுக்கினான். அது முருகனே நேரில் வந்தாற்போல அத்தனை தெய்வாம்சமாய் இருந்தது. அந்த முருகன் சிலை பற்றி ஊர் முழுக்க பரவியது. அந்த தகவல் அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன் காதுக்கும் சென்றது.

சோழமன்னன் அந்த முருகன் சிலையை காண சிற்பி இல்லம் நோக்கி வந்தார். வந்தவர் சிலையை கண்டதும் முருகன் சிலையின் அழகில் சொக்கி போனான். இதுபோன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்கக்கூடாது என எண்ணி, அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு சென்று விட்டான்.

அந்த ஊரில் தனது விடா முயற்சியால் மற்றொரு முருகன் சிலையை வடித்தான். சிலை முழுவதுமாய் முடிக்குமுன்பே, முன்பு வடித்த சிலையைவிட இது அழகுள்ளதாய் அமைந்தது. தெய்வீகமான அந்த சிலையிலிருந்து ஒளி வீசவும் தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அழகாயும் ஒளியும் வீச தொடங்கிய அச்சிலையின் மகிமை அந்த ஊர் மன்னனான முத்தரசன் காதுக்கு சென்றது. அந்த அழகிய சிலையை காண மன்னன் சிற்பியின் இடம்தேடி வந்தார்.

6b5aff068a2952fbac01626eb0ed973b

மன்னர் சிற்பியின் வீட்டினுள் நுழைந்ததும் முருகன் அமர்ந்து இருந்த மயில் பறக்க ஆரம்பிக்கிறது. மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ‘ எட்டிப்பிடி ‘ என்று கூறுகிறார். காவலர்கள் மயிலை பிடிக்கும்பொழுது மயிலின் கால் சிறிது சேதம் அடைந்துவிடுகிறது. மயில் சிலை அங்கேயே நின்று விடுகிறது. எட்டுப்பிடி, எட்டுப்பிடி என்று கத்திய கத்தலே பின்னாளில் மருவி எட்டுக்குடி ஆனது. பின்பு மீண்டும் அதே சிற்பி இன்னொரு முருகன் சிலை வடித்தார். அதுதான் என்கண் கோவிலில் உள்ள முருகன் சிலை. முதலில் செய்த சிலை தான் சிக்கல் கோவிலில் உள்ள சிலை.

0c297e3ce81323e442e5f62dd54e7a28

எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள். எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் முருகப் பெருமானின் வாகனம் மயிலின் தலை வலது புறமாக இருக்கிறது.

f71075089e820202ad150e027dc5f026-1

சூரசம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம். போருக்கு போவதால் முருகன் உக்கிரமாய் இருப்பதால், அவரின் உக்கிரத்தினை தணிக்க பாலாபிஷேகம் செய்வது வழக்கம். சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வழிபாடு செய்வார்கள். வீட்டில் மழலை அழுகுரல் கேட்க, மணியை கட்டி வேண்டிக்கொள்வர். எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது இங்கும் நடக்கும்.

1727867acc837478cfec0804c79f05d2

கோயில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளுக்கும் சிலைகள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஐய்யப்பன், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கும் சிலைகள் இருக்கின்றன. சித்ராபௌர்ணமி தினத்தன்று இங்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. வான்மீகர் என்கிற சித்தர் சமாதி அடைந்த தலமாக இக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தலம் இது என கூறப்படுகிறது.

be73b8ab81d407b0b20ebed41eba23dc

இங்கு முருகன் அம்பாறையிலிருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்த முருகனை தரிசிப்பதாலும், அந்த முருகனின் வரலாறை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

இக்கோயில் நடை திறப்பு காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

முருகனுக்கு அரோகரா!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews