குடுத்து வச்சவங்க இந்த தென் தமிழக மக்கள்!! இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது.
இதனால் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
அதன்படி தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தென்தமிழக மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களில் கோடை காலத்தில் மழை பெய்வது மக்களுக்கு இதமான வானிலையே உருவாக்கியுள்ளது.
