முழு கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணை! 100 கன அடி உபரிநீர் வெளியேற்றம்!!

குதிரையாறு அணை

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை நீரானது சாலையில் ஓடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள சிறிய அணை தொடங்கி பெரிய அணை வரை வரிசையாக விரைந்து நிரம்பி கொண்டு வருகிறது..குதிரையாறு அணை

இதனால் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது குதிரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியது என்று  பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

இந்த குதிரையாறு அணையானது பழனியில் அருகே காணப்படுகிறது. அதன்படி பழனியில் பெய்த தொடர் மழையால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் இந்த குதிரையாறு அணையில் இருந்து 100 கனஅடி உபரிநீர், அமராவதி ஆற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.குதிரையாறு அணைக்கு வரும் நீரின் அளவு 200 அடியாக உள்ளது என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print