
Entertainment
‘குஷி’ படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்: வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு குஷி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ‘Liger’ என்ற திரைப்படத்தை தொடர்ந்து ஷிவா நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா இப்படத்தில் நடித்து வருகிறார். காதல் களத்துடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் கிறிஸ்மஸ் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதோடு இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழிகளிலும் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 2000-ம் ஆண்டு தளபதியின் அசத்தல் நடிப்பில் வெளியான படத்திற்கு குஷி என பெயர் வைக்கப்பட்டநிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் 11-ஆவது படத்திற்கும் படக்குழுவினர் இப்பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
