கோட் சூட்டில் திருவள்ளுவர் படம்.. குஷ்பு பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் சமூகவலைதளத்தில் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ திருவள்ளுவர் கோட் சூட் போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி வருவதாக பாஜக மீது மற்ற அரசியல் கட்சிகள் புகார் கூறிவரும் நிலையில் அந்த புகாரை கண்டுகொள்ளாமல் பாஜக தலைவர் அண்ணாமலை காவி உடையில் உள்ள திருவள்ளுவர்ர் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

இந்த நிலையில் பாஜக பிரபலம் குஷ்பூ கோட் சூட்டில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாஜகவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கிறாரா? அல்லது வித்தியாசமாக திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பதிவு செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் தமிழர்களின் பெருமை மிகுந்த புலவர் திருவள்ளுவர் தினத்தை உலகமே கொண்டாடுவோம் என்று பதிவு செய்துள்ளார்

இந்த நிலையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், கவர்னர் ரவி உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.