அவர் ஒரு கோழை, என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.. குஷ்பு ஆவேசம்

தன்னை அவதூறாக பேசிய அவர் ஒரு கோழை என்றும் அவர் என்னிடம் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் கடந்த மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவில் உள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கெளதமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்து குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டார்.

saidai sadiqஇந்த நிலையில் நடிகைகளை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது அவதூறாக பேசிய நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அதன் பிறகு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என்றும் சைதை சாதிக் தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். இதனை அடுத்து அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சைதை சாதிக் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர் ஒரு கோழை என்றும் அவர் எந்த மேடையில் எங்களை அவமரியாதையாக பேசினாரோ அதே மேடையில் மன்னிப்பு கேட்கட்டும் என்றும் ஆனால் அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார் என்றும் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த டுவிட்டர் போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.