முதலிடத்தில் குறிஞ்சிப்பாடி; குஷியில் மக்கள்!-மழைப்பொழிவு நிலவரம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை நீரானது சாலைகளில் ஓடுகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு பற்றிய நிலவரம் வெளியாகியுள்ளது.கனமழை

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தம்பம்பட்டி பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெய்வேலி,பெலந்துறை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. புவனகிரி பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தரங்கம்பாடியில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கள்ளிக்குடி, சிதம்பரம் பகுதியில் தலா ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காமாட்சிபுரம், சின்னக்கல்லார், திருமங்கலம், கொள்ளிடத்தில் தலா ஆறு சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. ஆடுதுறை, மானாமதுரை, போடிநாயக்கனூர் தலா ஆறு சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. வடபுதுப்பட்டி, பழனி, மஞ்சளாறு, அருப்புக்கோட்டை, ஜெயங்கொண்டத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment