செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தனியார் சொகுசு விடுதிகளில் வணிக நோக்கத்துடன் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கி, இயற்கை நீர் வீழ்ச்சி பாதையை மாற்றுவதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் இயற்கை நீர் வீழ்ச்சிகள் அழிவை நோக்கி செல்வதால் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் தனியார் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. அப்போது இயற்கை நீர்வீழ்ச்சிகளை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது சட்டவிரோதமானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தினர்.

இந்நிலையில் மனுவின் விசாரணை அமர்வு இன்று மீண்டும் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்காக சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி! ஆளுநர் ஒப்புதலுக்கு கோரிக்கை – அமைச்சர் ரகுபதி!

அதோடு முறைகேட்டில் ஈடுப்பட்ட தனியார் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். அப்போது பேசிய நீதிபதி முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.