Connect with us

குரங்கம்மை எதிரொலி: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!!!

செய்திகள்

குரங்கம்மை எதிரொலி: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!!!

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது உலகம் முழுவதும் சுமார் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்த அம்மை நோயால் இதுவரையில் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இதன் ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் கேரளாவை சேர்ந்த ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டெல்லியில் ஒருவருக்கு மேலும் குறைந்த மற்றும் உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கையானது 7 ஆக அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, கொரோனா கட்டுப்பாடுகளை போலவே குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குரங்கு அம்மை நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறியுள்ளது.

குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்றும் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top