குறைகளை மன்னிக்கும் மன்னாதி மன்னன், திருப்பாவை பாடலும், விளக்கமும் -8


1d84f22bd911bc84dc39891a3fec4b61

பாடல்….

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
 மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!

பொருள்:

“பெருமகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கீழ்த்திசையில் வானம் வெளுத்துள்ளது. எருமைகள் பனிப்படர்ந்த புல்வேலிகளில் மேய்வதைப்பார்! பாவை நோன்புக்கு கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து நின்றோம். இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்னும் அரக்கனின் வாயைப்பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் என்னும்) மல்லர்களை மாளச்செய்தவனும், தேவாதி தேவர்களுக்கெனல்லாம் தலைவனான கண்ணனின் மகிமையைப்பாடி, அவனை நாம் வணங்கினால், நம் குறைகளை மன்னித்து, அருள் புரிவான். எனவே எழுந்திராய்!”

விளக்கம்.. கம்சனால் ஏவப்பட்ட சானூரன், முஷ்டிகன் என்னும் மாபெரும் மல்லர்களை வீழ்த்திய பரந்தாமனை வணங்கி அவன்புகழ் பாடினால் நம் பாவங்களை மன்னித்து அருள்புரிவான் என்பது இப்பாடலின் விளக்கம்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews