Connect with us

‘அரிசி ராஜா’வுக்கு என்ன ஆச்சு?… பதற்றத்தில் வனத்துறை!

கும்கி யானை

செய்திகள்

‘அரிசி ராஜா’வுக்கு என்ன ஆச்சு?… பதற்றத்தில் வனத்துறை!

கும்கி யானைக்கு மதம் பிடித்தது, டாப் சிலிப் கேம்ப்புக்கு யானை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது…

கோவை மாவட்டம் ஆனைகட்டி சீங்குளி வன பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்தது. ஆற்றின் ஓரம் நின்றுகொண்டிருந்த ஒற்றை காட்டு யானை கடந்த 15ம் தேதி வனத்துக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் காயமடைந்த காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில் காட்டு யானையை பிடிக்க டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் கலீம் மற்றும் அரிசிராஜா ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 14 நாட்களாக இரு கும்கி யானைகள் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

கும்கி யானை அரிசிராஜாவிற்கு மதம் பிடித்த நிலையில் இரு நாட்களாக பாகன் கவாடிக்கு கட்டளைகளுக்கு கீழ் படியாமல் இருந்தது. இரண்டு மரங்களை முறித்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானை அரிசிராஜாவை பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

வனத்துறை லாரி மூலம் கும்கி யானை அரிசிராஜா ஏற்றப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. முதல் முறையாக கும்பியாக களத்தில் ஆபரேசனுக்கு தயாரான முத்து மதம் பிடித்ததனால் டாப்சிலிப்புக்கு திருப்பி அனுப்பபட்டது. பொள்ளாச்சியில் ஏழு பேரை கொன்று அரிசி ராஜாவாக வளம் வந்த காட்டு யானை கலீம் கும்கியால் பிடிபட்ட முத்து கும்கியாக மாற்றப்பட்டது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top