முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கும்கி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடபட்டது. அதற்காக தெப்பக்காடு முகாமில் உள்ள 22 வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டு வரிசையாக நிறுத்தி வைக்கட்டன.
பின்னர் முகாமில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற கிருஷ்ணா மற்றும் மசினி ஆகிய 2 யானைகளும் கோவிலை சுற்றி மணி அடித்தவாறு 3 முறை சுற்றி வந்தன. பின்னர் மண்டியிட்டு தும்பிக்கையை தூக்கி பிளினி விநாயகரை வழிபட்டன. அப்போது பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசைத்தனர்.
பின்னர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து வளர்ப்பு யானைகளுக்கும் பொங்கல், அரிசி, தேங்காய், வெள்ளம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட 15 வகையான சிறப்பு உணவுகள் வழங்கபட்டது. வளர்ப்பு யானைகள் பூஜை செய்ததை ஏராளமான சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.