Connect with us

நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்: நெட்டிசன்கள் ஷாக்!!

nithyanandastatue

தமிழகம்

நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்: நெட்டிசன்கள் ஷாக்!!

கைலாச அதிபர் நித்யானந்தா கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சையில் இருந்ததாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அவ்வப்போது சோசியல் மீடியா பக்கத்தில் ஏதோ ஒரு பதிவை போட்டு நித்தியானந்தா நலமுடன் இருப்பதாக கூறப்பட்டது.

குறிப்பாக முகம் இன்றி காகிதம் மற்றும் பேப்பர் பேனாவில் நித்தியானந்தாவின் சில பகுதிவுகளை முகநூலில் அவருடைய சீடர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே வசிக்கும் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலைப் போலவே 18 அடியில் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தியதே நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நித்தியானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலை வைத்து கும்பாபிஷாகம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top