கும்பம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை பழைய பொருட்களை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் விற்று முடிப்பீர்கள். திருமண முயற்சிகளைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையும். கூட்டுத் தொழில் செய்ய ஆகச் சிறந்த அற்புதமான காலகட்டமாக இருக்கும். தந்தையின் ஆதரவு உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும்.

ஜென்மத்தில் சனி இருக்கும்பட்சத்தில் தொழில்ரீதியாக பெரிய அளவில் முடக்கம் இருந்தாலும் ஓரளவு நகர்வு இருக்கும். தொழில்ரீதியாக எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்யாதீர்கள்.

பணவரவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அத்தியாவசிய வாழ்க்கைக்குத் தேவையான பணம் கையில் இருக்கும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக வில்லங்கம் ஏற்படும். தாயின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

உயர்கல்விரீதியாக இருந்த தடங்கல்கள் சரியாகும்; படிப்பினை மீண்டும் புத்துணர்வுடன் தொடர்வீர்கள். எந்தவொரு நன்மை தரும் விஷயங்களும் உடனடியாக நடக்காது; பல தடங்கல்கள், தாமதங்களுக்குப் பின் மன அழுத்தத்தினைக் கொடுத்தே எந்தவொரு விஷயமும் நடக்கும்.

தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். அலைச்சல்கள் நிறைந்த காலகட்டமாக இருப்பதால் திட்டத்தினைத் தீட்டியே எந்தவொரு விஷயத்திலும் களம் இறங்குங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews