கும்பம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

கும்பம் சுபகிருது வருட பலன்கள்

வெற்றி தோல்வியைச் சரிசமமாகப் பார்க்கும் குணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டாக இருக்கும்.

உடல்நிலைப் பொறுத்தவரையில் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை. பெற்றோர் உடல் நலனும் சீராக இருக்கும். பெற்றோருடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும்.

வீடு, மனை என எதையும் வாங்கவோ விற்கவோ வேண்டாம், மேலும் புதிதாக வண்டி, வாகனம் வாங்கவே கூடாது. விரயச் சனி காலம் என்பதால் பொருளாதாரம் ரீதியாக பெரும் சரிவினைச் சந்திப்பீர்கள்.

புத்திர பாக்கியத்திற்குக் காத்திருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலன் சிறப்பாக இருக்கும். கடன் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, விரயச் செலவுகளுக்காக கடன் வாங்குவதை முடிந்தளவு தவிர்த்தல் நல்லது.

மன ரீதியாக நீங்கள் தைரியமாகச் செயல்படுவது வேண்டும். மேலும் குடும்பத்தில் சகோதர- சகோதரிகளாலும், உறவினர்களாலும் பிரச்சினைகள் ஏற்படும். உங்களின் அமைதி மட்டுமே பிரச்சினைகளை சுமுகமாகக் கொண்டு செல்ல ஒரு தீர்வாக இருக்கும்.

வாக்கு கொடுத்து அதனை நிறைவேற்ற முடியாமல் மிகவும் கஷ்டப்படுவீர்கள். திருமண காரியங்கள் நிச்சயம் கைகூடும். கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் அதிகரிக்கும்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது, வேலையில் இருப்போர் புதிதாக வேலை தேடும் முயற்சியில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.