கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள கும்பம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் சொந்த வீட்டில் அமரும் பொழுது அரசு சார்ந்த விஷயங்கள் விரைவில் முடிவடையும்.

புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகுவதால் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படக்கூடும். செப்டம்பர் 3-ம் தேதி புதன் அஸ்தமனம் ஆகும் பொழுது பிள்ளைகளால் பிரச்சனைகள் தலைதூக்கும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது புதிய வாய்ப்புகள் வரக்கூடும்.

குருவின் பார்வையால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறக்கூடும். உங்களுக்கு நல்லவை நடைபெற உறவினர்கள் போட்டி போட்டு கொண்டு உதவ முன்வருவார்கள். உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் இல்லத்தில் பயணங்கள் அதிகரிக்கும்.. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ராசியின் மீது சனியின் பார்வை விழுவதால் செலவுகள் அதிகரிக்கும்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் புதிய முயற்சிகள் கைக்கூடும். நெருங்கிய உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய வேலை அமையக்கூடும்.

சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது யோகமான நேரமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு 4,9-ம் இடங்களின் அதிபதியான சுக்கிரன் குருவுடன் இணைந்து உங்களுக்கு பல வித மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் கணிசமான லாபம் வரக்கூடும். கணினி துறை, கட்டிட துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு லாபம் வரக்கூடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment