கும்பம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

குருபகவான் 2 ஆம் இடத்திலும், சனி பகவான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போர் வீடு வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

காதலர்கள் தங்களது காதலை வீட்டில் சொல்லி திருமணம்வரை செல்வார்கள். கடன் சுமையானது படிப்படியாகக் குறையும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். 10 ஆம் இடத்தினை குரு பகவான் பார்க்கிறார், தொழிலில் திருப்புமுனை ஏற்படும் காலமாக உள்ளது.

இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டும் லாபத்தில் அடியெடுத்து வைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பணம் ரீதியாக கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.

விருந்தாளிகள், நண்பர்கள் என அனைவருடனும் கலகலப்பாக இருப்பீர்கள், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நட்பு வட்டாரம், உறவினர்களின் சுப காரியங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வழக்கறிஞர், மேடைப் பேச்சாளர்கள் போன்ற தொழில் துறைகளில் இருப்போர் பெயர், புகழ் பெற்று இருப்பர். உடன் பிறப்புடன் பிரச்சினைகள் ஏற்படும், பூர்விகச் சொத்தினை விற்பதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

தந்தைவழி உறவுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் என பயணங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்படும், மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு, தந்தையின் தொழிலில் சிறு சரிவு ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews