கும்பம் ராசியினருக்கு இந்தப் பங்குனி மாதம் முயற்சியால் வெற்றி பெரும் மாதமாக இருக்க போகிறது. இந்த மாதம் ராசியிலிருந்து சுக்ரன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களை கொடுக்கப் போகின்றார். மேலும் பதினோராம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இருப்பதாலும், ஆறாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதாலும் எடுத்தக் காரியங்களில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பகவான் பதினோராம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் மேம்படச் செய்வார்.
சூரியன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்து கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள். பேச்சில் கவனம் தேவை. அவ்வப்போது குடும்பத்தில் மற்றும் நண்பர்களின் மத்தியில் சண்டை வந்துப் போகும். செவ்வாய் மற்றும் சனி பதினோராம் இடத்தில் இருப்பதால் மனை, வீடு வாங்கும் பொழுது பத்திரங்களை சரிப் பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
அதிசார வக்ர குரு ஏப்ரல் பத்தாம் தேதி வரை 10-ம் வீட்டில் இருப்பதால் உத்யோகத்தில் வேலை சுமை ஏற்படும். ஒரு சிலருக்கு வேலை இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரக்கூடும். ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பிறகு வக்கிரம் பெற்ற குரு துலாம் ராசிக்கு வருவதால் நன்மைகள் உண்டாகும். புதன் பகவானால் மனக்கவலை வரலாம்.
ஆபரணங்கள், ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீடு அமையவில்லையே என்று இருந்த சிலருக்கு உங்கள் ரசனைப்படி வீடு அமையும் யோகம் இருக்கிறது. இந்த மாதத்தில் வீடு மாற்றம், மனை வாங்குவது எல்லாம் கைக்கூடி வரும்.
கும்ப ராசியினருக்கு கேது பகவான் 12-ம் இடத்தில் இருப்பதால் வீண் அலைச்சல், தூக்கமின்மை ஏற்படும். ராகு 6-ம் வீட்டில் இருப்பதால் தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்ல படியாக முடிவு பெறும். மார்ச் 22-ம் தேதிக்குப் பிறகு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மனக்கசப்பு வரக்கூடும். ஏப்ரல் ஏழாம் தேதிக்குப் பிறகு உறவினர்கள் வருகையால் ஆதாயம் அடைவீர்கள்.
மார்ச் 20-ம் தேதிக்குப் பிறகு பிள்ளைகளால் பெருமை ஏற்படும் அளவிற்கு ஏதேனும் நிகழ வாய்ப்பு இருக்கிறது. கும்ப ராசி பெண்களுக்கு புகுந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். இதுவரை விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
வியாபாரம், தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.
மாணவ மாணவிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் தடைகள் எல்லாம் விலகும்.
அதிகாலையில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் சூரிய பகவானால் வரும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.