கும்பம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை வியாபாரம் செழிப்படையும். வேலைவாய்ப்புரீதியாக புதிய மாற்றங்கள் நடக்கும். சப்தம தானத்தில் சனி பகவானின் பார்வை விழுவதால் எந்தவொரு காரியத்தையும் யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள்.

எதிரிகளின் பலம் அதிகரிக்கும். வாக்குச் சாதுர்யத்தின் மூலம் தலைமைப் பண்பு உங்களை வந்து சேரும். வருமானத்திற்குக் குறைவு இருக்காது; விரயாதிபதி சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் விரயத்துக்குக் குறைவு இருக்காது.

செவ்வாய் பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார்; வேலையிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் எடுக்கும் எந்தவொரு முடிவுகளிலும் குழப்பம் மற்றும் தடுமாற்றத்தினை ஏற்படுத்துவார்.

வேலைரீதியாக புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. சமூக அந்தஸ்து குறைய வாய்ப்புள்ளது, வரவுக்கேற்ற செலவு உள்ளது. 3 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் யோகத்தினைக் கொடுப்பார்.

வெற்றியினைக் கொண்டு வந்து சேர்ப்பார். சுக்கிரன் 4 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து மேன்மையினையே கொடுப்பார். சுய தொழில் செய்வோர், வேலைக்குச் செல்வோர் எந்தவொரு புது முயற்சிகளிலும் கவனமாக முடிவு எடுத்தல் வேண்டும்.

தவறுகளைச் செய்ய வைக்க சிலர் உங்கள் கூடவே இருப்பர்; அவர்களிடம் இருந்து விலகி இருத்தல் நல்லது. விஷ்ணு பெருமானை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.