கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

8 ஆம் இடத்தில் சுக்கிரன்- சூர்யன்- புதன், 4 ஆம் இடத்தில் செவ்வாய், 2 ஆம் இடத்தில் குரு, 12 ஆம் இடத்தில் சனி என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்புரீதியாக நிம்மதியின்மை, நல்ல வேலை கிடைக்காமை, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமை என மன உளைச்சலில் இருப்பீர்கள்.

தொழில்ரீதியாக பெரிதளவில் லாபம் இல்லாமல் சுமாராகவே இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பண ரீதியான கஷ்டங்கள் ஏற்படும், கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

திருமண வரன் பார்ப்போருக்கு ஓரளவு வரன் கைகூடும் காலமாக இருக்கும், அதிலும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான காலத்தில் வரன் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை குழப்ப மனநிலையிலேயே இருப்பர். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.  செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்களில் பயணம் செய்வோர் கூடுதல் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. இரவு நேரப் பயணங்களை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடனும் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும், உடன் பிறப்புகளுடன் சொத்துரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment