கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

சனி 12 ஆம் இடத்தில் விரயச் சனியாக உள்ளது, 2 ஆம் இடத்தில் குரு பகவான், சனி பகவான் 12 ஆம் இடத்தில், சுக்கிரன், சூர்யன், புதன் 10 ஆம் இடத்தில், செவ்வாய் 4 ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது.

இந்த ஓராண்டில் ஓரளவு சிறப்பான மாதமாக நவம்பர் மாதம் இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக எதிர்பார்த்த மாற்றங்கள் அமையும். பதவி அதிகாரம், சம்பள உயர்வு இருக்கும்.

சிலருக்கு பளுச் சுமை குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த பிரச்சினைகள் சரியாகும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பர், பெற்றோர் உடல் நலனில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

வீண் செலவுகளில் இருந்து ஓரளவு ஆதாயமான செலவுகளைச் செய்வீர்கள். தொழில்ரீதியாக பணப் புழக்கம் இருக்கும். ஆனால் அபிவிருத்தி போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தள்ளிப் போன வரன்கள் கைகூடும் காலமாக இருக்கும். காதலர்களுக்கு இடையேயான உறவில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

உடல் ஆரோக்கியம்ரீதியான பிரச்சினை கொண்டவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் இதுவரை படிப்பில் கண்ட தடைகள் ஒழிந்து போகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.