கும்பம் மார்கழி மாத ராசி பலன் 2022!

2 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும்.  வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இந்தமாதம் நீங்கள் நினைத்த பல காரியங்களைத் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முடிப்பீர்கள்.

3 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் இளைய சகோதர, சகோதரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். வெளியூர்ப் பயணங்கள் ஆதாயப் பலன்களைக் கொடுக்கும். அசையாச் சொத்துகளை வாங்கும், விற்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

அசையாச் சொத்துகள் மூலம் லாபம் கிட்டும் மாதமாக இருக்கும். பூர்விக புண்ணிய ஸ்தானங்கள் வலுப் பெறுகின்றது. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் மாதமாக இருக்கும், குழந்தைகள் கல்வி நலனில் மிகச் சிறப்பாக இருப்பர்.

கடன் தொல்லை படிப்படியாகக் குறையும், கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நேர்மறையான தீர்ப்புகள் கிடைக்கப் பெறும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும் மாதமாக இருக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

வேலைவாய்ப்புரீதியாக கூடுதல் பொறுப்பு இருக்கும். பெண்களால் அனுகூலமான மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews